பெண்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய ஆப் அறிமுகம்!


Third party image reference
வணக்கம் வணக்கம் எங்களுடைய பகுதிக்கு வந்தமைக்கு நன்றி,இன்று நாம் ஒரு புதிய ஆப் பற்றி பேசஇருக்கிறோம்.இந்த செயலியின் மூலம் பெண்கள் 2 மணி நேரத்திற்கு ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆஃப் வந்ததில் பலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், சிலர் இவற்றை கலாச்சார சீரழிவுக்கான வழி என கூறுகின்றனர். இந்நிலையில் தான் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் ஆப் ஒன்று மும்பை மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடகைக்கு ஆண் நண்பர்கள், வாடகைக்கு பெண் தோழிகள் மற்றும் வாடகைக்கு காதலன்/காதலியை தேர்ந்தெடுக்கும் பல செயலிகள் ஏற்கனவே இந்தியாவில் வந்துவிட்டன.இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி, வாடகைக்கு 2 மணிநேரத்திற்கு ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி மூலம் பெண்கள் ஆண் நண்பர் ஒருவரை 2 மணி நேரம் வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
செயலியின் விதிமுறைகள்
  • பெண்கள் அவருடன்,சினிமா,பூங்கா,உணவகம்,கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம்.ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வீட்டிற்கு அழைத்து செல்லக்கூடாது.
  • அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.இதெல்லாம் இந்த செயலியில் உள்ள விதிமுறைகள்.
பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புதிய செயலியை உருவாக்கியுள்ளதாக இந்த செயலியை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவிக்கின்றது.
Image Credit : Google
Previous Post
Next Post
Related Posts

0 comments: